முனி
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
முனி - உதாரணம்
முனி - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை மனிதரும் தேவரும்மாயா முனிவரும் வந்து சென்னிகுனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்பனிதரும் திங்களும் பாம்பும்பகீரதியும் படைத்தபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே மனிதர் தேவர் பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும் குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும் அரவையும் கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்
பராசக்தியாகியநீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும் அச்சிவத்தைக் குறித்துத்தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும் அம் முக்தியால் ஏற்படுகின்றவிதையும் அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும் ஞானத்தின் உட்பொருளும் என் நின்று சகல பந்தங்களினின்று காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர் அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டது அல்ல என்கைநன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே அபிராமி அன்னையே என் உமையவளே நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே நான் பாவங்களையே செய்தாலும் நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும்அதனின்று காப்பது நின் கடைமையாகும்
சம்புசக்தி சங்கரி எழிலுடையாள் நாகபாணி மாலினி உலகளிக்கும்வராகி சூலி மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்நீயே ஆதியானவள்
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமேசரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே திரிபுரத்தை நிலையென்று நினைத்த தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும் திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே அன்னையேஉன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய் அது மட்டுமல்ல அவர்களைப் பொய்மையான இந்தஉலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் பிறப்பறுப்பாய் பெருநிலை தருவாய் வையம் துரகம் மதகரி மா மகுடம் சிவிகைபெய்யும் கனகம் பெருவிலை ஆரம்பிறை முடித்தஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்புசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே ஏ அபிராமி உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன்திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள்
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தம் கோன்போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனிகாதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன் முதல்சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே என்னுடைய அன்னை அபிராமியை புண்ணியம் பல செய்து அவற்றின் பயனையும் அடைந்த சூரியன்சந்திரன் அக்கினி குபேரன் தேவர்களின் தலைவன் இந்திரன் தாமரை மலரில் உதித்த பிரம்மன்முப்புரங்களை எரித்த சிவபெருமான் முரனைத் தண்டித்த திருமால் பொதியமலை முனியாகிய அகத்தியர் கொன்று போர் புரியும் கந்தன் கணபதி மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள்அனைவரும் போற்றித் துதிப்பர்